அதிர்ச்சி... நடுக்கடலில் படகு கவிழ்ந்து பெரும் விபத்து; 100 பேர் நீரில் மூழ்கி பலி... 26 பேர் மாயம்!

 
படகு கவிழ்ந்து கப்பல்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து பெரும் விபத்து நேரிட்ட நிலையில், படகில் பயணித்த 100 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. படகில், ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் காலரா நோய் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக இவர்கள் கடல் வழியாக பயணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


தென்னாப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த ஆறு மாத காலமாகவே காலரா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டுமே அந்நாட்டில் சுமார் 15,000க்கும் அதிகமானவர்கள் காலரா நோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். 
படகு கவிழ்ந்து கப்பல்

காலரா நோய் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட படகு ஒன்று, நம்புலா மாகாணத்தில் இருந்து வேறு ஒரு தீவை அடைய முயன்றபோது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் மாயமாகி உள்ளதாக தெரிகிறது. அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.  படகில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றது தான் விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web