அதிர்ச்சி... 11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை... காவலர் கைது!

 
இளவரசன்

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில், 16 வயதுடைய 11ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்ட புகாரில் வெங்கமேடு காவலர் இளவரசன் என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவரசன்

கரூர் மாவட்டம் அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி அவரது தாயிடம் தெரிவித்த நிலையில், மாணவியின் தாயார் நடந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். 

இளவரசன்

உடனடியாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இளவரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த நிலையில் இன்று காலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!