அதிர்ச்சி... பரோட்டா வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை!
ஈரோடு மாவட்டம் நெரிஞ்ப்பேட்டையைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி லக்கேஸ்வரி. இவர்களது மகன் கிரி(20) கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மின்வாரிய ஊழியரான நடராஜன் விபத்து ஒன்றில் உயிரிழந்த நிலையில், லக்கேஸ்வரி குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கிரி தனக்கு இருசக்கர வாகனம் வேண்டும் என்று தாயார் லக்கேஸ்வரியிடம் கேட்டுள்ளார். அதற்கு, ஏற்கனவே கடன் இருப்பதால் கடனையெல்லாம் முடித்து பின்பு இரு சக்கர வாகனம் வாங்கி தருவதாக மகனிடம் கூறியுள்ளார். இதில் மகன் கிரி அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மதியம் பரோட்டா சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்றும், தனக்குப் பரோட்டா வேண்டும் என்றும் தாய் லக்கேஸ்வரியிடம் கூறியுள்ளார்.
அதற்கு லக்கேஸ்வரி, இந்த நேரத்தில் பரோட்டா கிடைக்காது. பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறியிருக்கிறார். எனது தந்தை இருந்திருந்தால் எனக்கு கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்திருப்பார் என்று புலம்பியபடியே மகன் கிரி சென்றிருக்கிறார்.
பின்னர் தான் கேட்ட வண்டியும் கிடைக்கவில்லை, சாப்பிட ஆசைப்பட்ட பரோட்டாவும் கிடைக்கவில்லை என்று மன விரக்தியில் இருந்த கிரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரியின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!