அதிர்ச்சி... அரசு பேருந்தில் பயணிகளிடம் போலி டிக்கெட் கொடுத்து வசூலித்த நடத்துநர், ஓட்டுநர்!

கண்டக்டர்

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இணைந்து போலி டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்கி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் டிக்கெட்டுகள் வழங்கப்படும் நிலையில் சிலர் இதில் முறைகேடுகள் செய்வதாக புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற ஏசி பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அரசுப் பேருந்து

போலி டிக்கெட் விற்ற அரசுப்பேருந்து நடத்துநர், ஓட்டுநர்

அப்போது நடத்துநர் வழங்கி வந்த டிக்கெட்டுகள் போலியானது என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், நடத்துநரிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட போது, அவரது பேண்ட் பாக்கெட்டிலும், அச்சடிக்கப்பட்ட போலி டிக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே பயணிகள் முன்னிலையில் போலி டிக்கெட்டுகளை நடத்துநர் வழங்கியதை அதிகாரிகள் கண்டுபிடித்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பேருந்தின் நடத்துநர், சேலத்திலிருந்து வரும் வழியெங்கும் பாயிண்ட் டு பாயிண்ட் போல் அல்லாமல், சிற்றூர்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்ததாக அதிகாரிகளிடம் அப்போது பயணிகள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து அவர்களிடமிருந்தும் புகார் கடிதம் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து மாற்றுப்பேருந்தில், பயணிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web