அதிர்ச்சி... தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கிய நாட்டு துப்பாக்கி!

 
கள்ளக்குறிச்சி

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில், பகண்டை வளாகம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான கொளஞ்சிவேல் தலைமையில் சோதனை நடந்தது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் போலீசார் வாகன சோதனை செய்வதை கண்டு தாங்கள் வைத்திருந்த பையை சாலையோரம் வீசிவிட்டு தப்பி ஓடினர். உடனே அந்த பையை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி சோதனை செய்ததில் அதில்  வேட்டை செய்யப்பட்ட 4 பறவைகள் மற்றும் நாட்டு துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் நாட்டு துப்பாக்கி மற்றும் வேட்டை செய்யப்பட்ட பறவைகளை தேர்தல் பறக்கும் படையினர் வாணாபுரம் வனக்காப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, தலைமறைவானவர்கள் யார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web