அதிர்ச்சி.. இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பலி எண்ணிக்கை 7000பேரை தாண்டியது..!

 
இஸ்ரேல்-ஹமாஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்ததுள்ளது

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 19 வது நாளை எட்டியுள்ளது.அடுத்தக் கட்டமாக வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. எல்லையில் தனது துருப்புகளை இஸ்ரேல் குவித்து வருகிறது. முன்னதாக இஸ்ரேல் காசா மீது ஞாயிற்றுக்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. \

Israel-Hamas War Updates: Aid trucks to Gaza didn't have enough supply for  even 1 school, says Palestinian spox | Mint

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 5 ஆயிரத்து 791 பேர் உயிரிழந்துள்ளனர்.

EU's top diplomat urges 'humanitarian pause' in Israel-Hamas war

அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக காசாவில் தான் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

From around the web