அதிர்ச்சி... புனித யாத்திரையில் உணவு சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம்... 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில் உள்ள மாஹூர் பகுதியில், பக்தர்கள் சிலர் 'தாக்கூர் புவா' புனித யாத்திரை மேற்கொண்டு இருந்தனர். இந்த புனித யாத்திரையில் நேற்று இரவு இவர்கள் உணவு சாப்பிட்டனர். இந்நிலையில் உணவு சாப்பிட்ட சுமார் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாஹுர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது அனைவரின் உடல்நலமும் தேறி வருவதாகவும், விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!