அதிர்ச்சி... கங்கையில் குளிக்காதீங்க... தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை!

 
கங்கை

புனித நதி என்று நினைத்து, கங்கையில் பொதுமக்கள் யாரும் தயவு செய்து குளிக்க வேண்டாம். ஏனெனில், கங்கையின் நீர் தரம் குளிப்பதற்கு தகுதியற்றதாக மாசடைந்துள்ளது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கங்கையில் குளித்தால் பாவங்கள் தீரும், காசியில் உயிர்விட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது காலங்காலங்களாக இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்தைப் போலவே இந்துக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதும், தங்களது முன்னோர்களான பித்ருக்களுக்கு கங்கை கரையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பதும் கடமையாக இருந்து வருகிறது. 

கங்கை
தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கங்கையை நோக்கி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குவிந்து வருகிறார்கள். ஆனால், கங்கை நதி அதிகளவு மாசடைந்து இருப்பதால், புனித நீராட உகந்ததல்ல என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தற்போது பொதுமக்களை எச்சரித்துள்ளது. 
மாநிலம் முழுவதும் போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு இல்லை. பூர்பா மேதினிபூர் போன்ற சில மாவட்டங்களில், ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. கங்கை நீரில் மலக் கோலிஃபார்ம் என்ற பாக்டீரியாவின் அளவு அதிகமாக இருப்பதால், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கங்கை நதியின் முழுப் பகுதியும் குளிப்பதற்குத் தகுதியற்றதாக இருப்பதாகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் 258.67 மில்லியன் லிட்டர்கள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக கலப்பதாகவும், இது மிகப் பெரிய சுகாதார அபாயத்தை ஏற்படுவதாகவும் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.

பசுமை
புனித நீரான கங்கையைக் காக்க தவறியதே இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. கங்கையில் கலக்கும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாத நீரைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மேற்கு வங்க அதிகாரிகளுக்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளொன்றுக்கு உற்பத்தியாகும் கழிவுநீரைச் சுத்திகரிக்க போதுமான வசதிகள் இல்லை. 100 சதவீத கழிவுநீர் சுத்திகரிப்பு என்ற இலக்கை அடையக் காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. பூர்பா, மேதினிபூர் போன்ற சில மாவட்டங்களில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியத்தைத் தருவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் வேதனை தெரிவித்துள்ளது.

From around the web