அதிர்ச்சி... போதையில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள்... 9 பேர் கைது!

 
கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசியதாக  8 சிறுவர்கள் உட்பட 9பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி

இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுகிராமத்தில் நேற்று முன்தினம் இரவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மது போதையில் 14, 17 வயதுடைய 8 சிறுவர்கள் உள்பட பலர் வந்தனர். அவர்கள் திடீரென்று கூட்டத்திற்குள் நுழைந்து ஆட்டம், போட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

இதை அதே பகுதியைச் சேர்ந்த வேலவன் மகன் கோமதி சங்கர் (24) கண்டித்து, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார். கலை நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் அவர்கள் அங்கு வந்தனர். மேடைக்கு பின்புறம் நின்ற கோமதி சங்கரை மிரட்டிய அந்த சிறுவர்கள் திடீரென்று மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அவர் மீது வீசினர். ஆனால் அவர் நகர்ந்ததால் பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்து தீப்பிடித்தது. அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அந்த தீயை அணைத்தனர்.

கைது

இந்த சம்பவம் தொடர்பாக கோமதி சங்கர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்து பெட்ரோல் குண்டு வீசிய 8 சிறுவர்கள் மற்றும் கோவில்பட்டி அருகே பழைய அப்பநேரியை சேர்ந்த சூரியகுமார் (23) ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர் 8 சிறுவர்களையும் நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அடைத்தனர்.

 

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

 

From around the web