அதிர்ச்சி.. மதுபோதையில் வீடு புகுந்து நாயை கொன்ற போதை ஆசாமி.. தர் அடி கொடுத்த பொது மக்கள்!

 
சத்தியசீலன்

சென்னை மதுரவாயல் அருகே உள்ள போரூர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன். இவர் கடந்த 11 ஆண்டுகளாக தனது வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் அவரது எதிர் வீட்டுக்குள் நுழைந்தார். இதை பார்த்த சத்தியசீலனின் நாய்கள் அந்த நபரை பார்த்து குரைத்தன. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் நாயின் வாயில் குத்தி கொன்றார்.

நாய் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து பார்த்தபோது, அந்த நபர் நாயைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அந்த நபரை பிடித்து அடித்தனர். பின்,  மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாயை கொன்ற நபரை கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, நாயை வளர்த்தவர், “நாய்க்கே இப்படி என்றால், மக்களின் நிலை என்ன?” என்று கதறி அழுதார். என கேட்டபடி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web