அதிர்ச்சி.. குவைத்தில் 'எமர்ஜென்சி' அறிவிப்பு... இந்தியாவுக்கு கடும் பாதிப்பு.. பெட்ரோல், டீசல் விலை எகிறும்!

 
குவைத் இந்தியா குவைத் இந்தியா

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் ஒரு வழியாக ஓயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத், தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 'ஃபோர்ஸ் மஜூர்' எனப்படும் அவசரக்கால நிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலால், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தி  முடக்கப்பட்டுள்ளது. குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திட்டமிட்டபடி கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விநியோகிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்ய வழியில்லாமல் குவைத்தின் சேமிப்புக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன, ஆனால் கப்பல்கள் கடலிலேயே முடங்கிக் கிடக்கின்றன.

கச்சா

உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதத்திற்கும் மேலாக இந்த ஒரு வழித்தடத்தையே நம்பியுள்ள நிலையில், அமெரிக்கப் படைகளின் இந்த முடக்கம் சர்வதேசச் சந்தையை நிலைகுலையச் செய்துள்ளது.

குவைத்தின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, சர்வதேசச் சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை நெருங்கி வருகிறது. வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் வெடிக்கும் என்ற அச்சத்தால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஓபெக் கச்சா எண்ணெய் க்ரூட் ஆயில்

இந்த விவகாரத்தில் இந்தியா இருமுனைத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்: கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர வாய்ப்புள்ளது. எரிபொருள் விலை உயர்வு சரக்கு போக்குவரத்துச் செலவை அதிகரிக்கும். இதன் விளைவாகக் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் (Inflation) ஏற்படக்கூடும். இறக்குமதியையே அதிகம் நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு, கரன்சி மதிப்பில் சரிவு மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பில் பாதிப்பு ஏற்படலாம்.