அதிர்ச்சி.. சேப்பாக்க ஸ்டேயத்தில் பறிப்போன பணியாளர் உயிர்..!

 
சேப்பாக்க மைதானம்
சென்னை சேப்பாக்க மைதானத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த பணியாளர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இன்று  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதனையொட்டி, கடந்த சில மாதங்களாக சேப்பாக்கம் மைதானத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன.

சேப்பாக்கம் மைதான பராமரிப்பு பணியின்போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு | Man  Dead after Falling During Chepakkam Ground Maintenance Work - hindutamil.in

இந்தப் பராமரிப்புப் பணியில், மதுரவாயலைச் சேர்ந்த முருகன் (52) என்பவர் பணிப்புரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மைதானத்தில் வெல்டிங் வேலை செய்த போது, எதிர்பாராத விதமாக 14 அடி உயரத்தில் இருந்து முருகன் கீழே விழுந்தார். இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

52 year old Murugan died after falling from a height of 14 feet while working at the Chepauk Stadium rsk

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி முருகன் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேப்பாக்க மைதானத்தில் பராமரிப்பு பணியின் போது பணியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web