அதிர்ச்சி! பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி 88 % உயர்வு!

 
அதிர்ச்சி! பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி 88 %  உயர்வு!


உலகம் முழுவதும் நிலவிய கொரோனா அச்சம் காரணமாக சென்ற ஆண்டில் உலகளாவிய கச்சா எண்ணெய் தேவை மிகவும் குறைந்தது. இதனால் சர்வதேச சந்தையில் அதன் விலை வெகுவாக சரிந்தது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது.

அதிர்ச்சி! பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி 88 %  உயர்வு!


பெட்ரோல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.19.98-ல் இருந்து ரூ.32.9 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.15.83-ல் இருந்து ரூ.31.8 ஆகவும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு 2018-19ல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2.13 லட்சம் கோடியாக இருந்தது எனவும், 2020-21ல் கலால் வரி ரூ.3.35 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்திருக்கலாம். கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் விற்பனை வரி பாதிக்கப்பட்டதால் கலால் வரி வசூல் இந்த அளவில் இருந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

From around the web