அதிர்ச்சி... ஒரே ஒரு நிமிஷத்திற்கு முன் வீட்டுக்கு கிளம்பிய பெண் ஊழியர் பணி நீக்கம்!

சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் வசித்து வருபவர் வாங் என்ற பெண். இவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட துயரம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நிமிடம் முன்னதாகவே வேலையை விட்டு வெளியேறியதால் வாங் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல், ஒரு மாதத்தில் ஆறு முறை வாங் வேலையை விட்டுச் சீக்கிரமாக புறப்பட்டதாகவும் தெரிகிறது. 3 வருடங்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த வாங் (வயது 28), தன்னை பணிநீக்கம் செய்த நிறுவனம் மீது புகார் அளித்து, அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்நிறுவனம் எந்த ஒரு எச்சரிக்கையும் கொடுக்காமல் திடீரென அவரை வேலையில் இருந்து நீக்கியது தவறு என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அந்நிறுவனம் அவருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!