அதிர்ச்சி.. ஏலகிரி மலைப்பாதையில் விபத்துக்குள்ளான அரசு பேருந்து.. பயணிகளுக்கு நேர்ந்த சோகம்!

 
ஏலகிரி மலை

சுற்றுலா தலமான ஏலகிரி மலைப்பாதையில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 14 சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த மலை தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலமாக கருதப்படுகிறது. ஏழைகளின் ஊட்டியாக விளங்கும் ஏலகிரிக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏலகிரி மலையை பார்வையிட வந்திருந்தனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் தாயலூர் கிராமத்தில் இருந்து திருப்பத்தூருக்கு சுமார் 40 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றது.

ஏலகிரி மலை கிராம மக்களுடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மலைப்பாதையில் இரண்டாவது ஊசி வளைவு வழியாக செல்லும் போது பஸ் பிரேக் திடீரென செயல் இழந்தது. உடனே அரசுப் பேருந்தை ஓட்டுநர் சுழற்றி, எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் சாலையோரம் நிறுத்தினார். பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என ஏலகிரி மலை காவல் துறையினர் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web