அதிர்ச்சி.. இரு மகள்களை கொடூரமாக கொன்றுவிட்டு.. தந்தையும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

 
சுமேஷ்

கேரள மாநிலம் கோழிக்கோடு பயோலி பகுதியைச் சேர்ந்த சுமேஷ் என்பவருக்கு கோபிகா என்ற 15 வயது மகளும், ஜோதிகா என்ற 12 வயது மகளும் இருந்தனர். இவரது தாயார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தார். மனைவி இறந்த பிறகு குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் சுமேஷ் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுமேஷ் சடலமாக அவரது வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அடையாளம் குறித்து விசாரித்ததில் அந்த நபர் பயோலி பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் அவரது இரு மகள்கள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை தனது இரு மகள்களையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, சுமேஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், குழந்தைகளை கொன்றுவிட்டு, சுமேஷ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web