அதிர்ச்சி... ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் மூடல்!
அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் திடீரென அறிவித்துள்ளார்.
Hindenburg research is shutting down...
— memes_hallabol (@memes_hallabol) January 16, 2025
Gautam Adani RN :#HindenburgResearch pic.twitter.com/0eORtEF7Ny
இதுகுறித்து நேட் ஆண்டர்சன், "ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடுவதற்கான காரணம் எதுவுமில்லை. மிரட்டல், உடல்நலப் பாதிப்புகள் போன்ற எதுவுமில்லை. கடந்த ஆண்டு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவுடன் விவாதித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இதனால், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவுசெய்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டில் அதானி குழுமத்திற்கு எதிரான அதன் அறிக்கையில் அந்நிறுவனம் பல பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தது . அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க் உலகின் பெரும் நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
