பெங்களூரில் அதிர்ச்சி... இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 பெண்களுடன் உல்லாசம்... லட்சக்கணக்கில் பணம் பறிப்பு!
கர்நாடகாவில் இன்ஸ்டாகிராம் மூலம் போலி கணக்கு தொடங்கி, இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிப் பணமும் பல பெண்களிடம் உல்லாசமும் அனுபவித்து வந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் விஜயாப்புராவைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான ஈரண்ணா படிகர் என்பவர், இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு ஆரம்பித்துத் தான் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் வேலை பார்ப்பதாகப் பொய்யான தகவலைப் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வாலிபர்களிடம் ஃபோன்-பே செயலி மூலம் பல லட்சம் ரூபாயைப் பறித்ததுடன், 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்களைத் தன் வலையில் வீழ்த்தி அவர்களுடன் உல்லாசமும் அனுபவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், விஜயாப்புராவில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஈரண்ணா படிகரைக் கதக் டவுன் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய சோதனையில், பல பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் வீட்டில் இருந்து ஏராளமான ஆணுறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
