பெங்களூருவில் அதிர்ச்சி... கணவரை 'தோழிகளுடன் உடல்லாசமாக இருக்க' வற்புறுத்திய பெண் இன்ஜினீயர்! போலீசில் கதறிய வாலிபர்!

 
உல்லாசம் உல்லாசம்

பெங்களூருவில் பெண் மென்பொருள் பொறியாளர்ஒருவர், தனது கணவரை மது அருந்தச் சொல்லி வற்புறுத்தியதுடன், ஆபாச வீடியோக்களைக் காட்டித் தனது தோழிகளுடன் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்திய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட கணவர் இது குறித்துப் போலீசில் கண்ணீர் மல்கப் புகார் அளித்துள்ள விபரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வழக்கமாக மது குடித்துவிட்டு மனைவியைத் துன்புறுத்தும் கணவர்களைப் பற்றிப் பார்த்திருப்போம். ஆனால், பெங்களூருவில் ஒரு பெண் தனது கணவருக்குப் பாலியல் மற்றும் மன ரீதியான தொல்லை கொடுத்த விசித்திரமான வழக்கை அம்ருதஹள்ளி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

காவலர்கள் இருவர் உல்லாசம்

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு வாலிபருக்கும், பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்க்கும் பெண்ணிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த வாழ்க்கையில், அந்தப் பெண்ணின் மதுப்பழக்கம் குறுக்கிட்டது. தினமும் அலுவலகம் முடிந்து தோழிகளுடன் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று மது குடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவதை அந்தப் பெண் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கணவர் இதைக் கண்டித்த போது, "மது அருந்துவது சாதாரண விஷயம், இதைப் பற்றிக் கேள்வி கேட்கக் கூடாது" என அந்தப் பெண் மிரட்டியுள்ளார். மேலும், தனது கடந்த காலக் காதல் மற்றும் உல்லாச வாழ்க்கை குறித்த விபரங்களைச் சொல்லி கணவரைத் தூண்டியுள்ளார். பெற்றோர்கள் சமரசம் செய்தும் அந்தப் பெண் திருந்தவில்லை.

உல்லாசம் சிசிடிவி செல்போன் பாலியல் மிரட்டல்

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கணவர் போலீசில் அளித்துள்ள புகாரில், தனது கணவருக்கு ஆபாச வீடியோக்களைக் காண்பித்து, அதில் இருப்பது போலவே தனது தோழிகளுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என அந்தப் பெண் கட்டாயப்படுத்தியுள்ளார். தானும் தனது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறி, கணவரை மனரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். மனைவியின் தொல்லை தாங்காமல் பிரிந்து வாழ முடிவெடுத்த கணவர், தான் வாங்கிக் கொடுத்த நகைகளைத் திருப்பிக் கேட்ட போது, அந்தப் பெண் தர மறுத்துள்ளார்.

மனைவியின் தொடர் பாலியல் மற்றும் மன ரீதியான சித்திரவதையைப் பொறுக்க முடியாமல் அந்த வாலிபர் காவல் நிலையப் படியேறினார். புகாரைப் பெற்ற அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பெண் இன்ஜினீயரை நேரில் அழைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண் தனது கணவருக்கு இத்தகைய பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெங்களூரு ஐடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.