ஐயோ காப்பாத்துங்க... துரத்துறாங்க... அவங்க கிட்ட வந்துட்டாங்க...” கதறிய இளம்பெண்கள்... பெங்களூருவில் அதிர்ச்சி!

 
செய்தி
 சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்றை விடாமல் பைக்கில் பின்தொடர்ந்து துரத்திச் சென்றவர்கள், காரின் ஜன்னல்களில் மோதி அதன் கதவை திறக்க முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, மூன்று நபர்களை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள மடிவாலா செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, வைரலான நிலையில், இந்த வீடியோ உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. அதன் பின்னர், இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், சம்பந்தப்பட்டவர்களின் மீது  நடவடிக்கை எடுத்தனர்.
அந்த வீடியோ காட்சியில், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த மூன்று, இளம்பெண் ஓட்டிச் செல்லும் காரைத் துரத்திச் செல்கிறார்கள். அந்த பெண், ஆபத்து கால உதவி எண்ணை அழைப்பதைப் பார்க்க முடிகிறது. பிரியம் சிங் என்ற காரை ஓட்டிச் செல்லும் பெண், "அவர்கள் எங்களைப் பின்தொடர்கிறார்கள், அவர்கள் என்னுடைய காரைக் குத்துகிறார்கள்" என்று கதறுவதைக் கேட்க முடிகிறது. 
ஸ்கூட்டரில் இருந்த ஆண்கள் அந்தப் பெண்ணை நோக்கி ஆக்ரோஷமாக சைகைகளை செய்கிறார்கள். அதன் பின்னர், அவர்கள் பின் தொடர்ந்து சென்று காரை முந்தி சென்று, காரை வழிமறிக்க முயல்கிறார்கள். அந்த பெண் தொடர்ந்து நிலைமையை விவரிக்கிறாள். "அவன் தவறாக பேசுகிறான், கதவைத் திறக்கிறான், கதவைத் தொட்டு இடிக்கிறான்" என்று கதறுகிறாள். 


 


ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், "மார்ச் 31 ம் தேதி இரவு,  புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இரண்டு பெண்கள் ஒரு காரில் பயணம் செய்தனர். இந்த நேரத்தில், அவர்கள் தங்கள் காரின் இண்டிக்கேட்டரை ஆன் செய்தனர் இண்டிகேட்டருக்கு எதிர் திசையில் பைக்குகளில் வந்தவர்கள் இது தொடர்பாக அந்த பெண்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது இளைஞர் கூட்டத்தில் இருந்த ஒருவர், காரின் கதவை திறக்க முயன்றார். அதில் அந்த பெண் பயத்தில் அலறியடித்துக் கொண்டு காரை இன்னும் வேகமாக ஓட்டினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரில் சென்ற பெண்களை துரத்திச் சென்று மிரட்டினர். 
ஆபத்து உதவிக்கோரி இளம்பெண்கள் 112க்கு டயல் செய்து, தங்கள் வாகனம் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை போலீசாருக்கு தெரிவித்தனர். நடந்த சம்பவம் குறித்து பதிலளித்த தென்கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சி.கே.பாபா, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


 


இந்த சம்பவத்தை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்த நபருக்கு நன்றி தெரிவித்தார். உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது, நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் போலீஸ் துணை கமிஷனர். இந்த சம்பவம் முழுவதையும் அந்த பெண் தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் குறித்து உடனடியாக 112 என்ற அவசர எண் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் குடிமக்களுக்கு போலீஸ் துணை கமிஷ்னர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web