சென்னையில் அதிர்ச்சி... 13 வயது சிறுமிக்கு போலீஸ் பூத்தில் பாலியல் தொல்லை... காவலர் வெறித்தனம்!

 
சிறுமி - போலீஸ்

சமீப காலங்களாக தமிழகம் முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் பெரும் அதிர்ச்சியாக போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமியிடம் பாலியல் காவலர் ஒருவரே அத்துமீறலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஜனவரி 25ம் தேதி சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு, அவரது 16 வயது ஆண் நண்பர் ஒருவர், தனது வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி,  வீட்டில் இருந்து வெளியேறி, பட்டினப்பாக்கம் பகுதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அந்த பகுதியில் காவல் வாகனம் ஒன்று இருந்ததைக் கண்டு அங்கிருந்த போலீசாரிடம் சென்று தனது வீட்டிற்கு செல்ல சிறுமி போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார்.

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

இந்நிலையில் அப்போது பணியில் இருந்த காவல் வாகன ஓட்டுநரான காவலர் ராமன், சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து சிறுமியை பட்டினப்பாக்கத்தில் உள்ள போலீஸ் பூத்திற்கு அழைத்துச் சென்று, போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதேபோல காவல் வாகனத்தில் சிறுமியை அழைத்து செல்லும் போதும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், காவலர் ராமனுக்கு எதிராக கூறப்பட்ட குற்றசாட்டுகளை உறுதி செய்தனர்.

இதனால் காவலர் ராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த விசாரணை தற்போது மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

பாலியல் பலாத்காரம்

மேலும் சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது ஆண் நண்பர் மற்றும் அதற்கு உடந்தையாக ஆண் நண்பரின் தாய் என 2 பேரும் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில் அண்ணா பல்கலை கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த அதிர்ச்சியாக உதவி கேட்டு போலீசாரிடம் சிறுமி சென்ற நிலையில், போலீசாரே பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web