கோவையில் அதிர்ச்சி... தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை பலி!

 
தண்ணீர் தொட்டி தொட்டிக்குள் மூழ்கி

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகர் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரத்தினபுரி வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஒரு வயதுக் குழந்தை தன்வந்த், தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, திறந்த நிலையில் இருந்த கீழ்நிலைத் தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்துள்ளது.

குழந்தை வாயில் டேப்

வெகுநேரமாகக் குழந்தையைக் காணாமல் தேடிய பெற்றோர், பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை மூழ்கிய நிலையில் கிடப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மீட்டுள்ளனர். தற்காலிகமாகத் தகரத்தால் மூடப்பட்டிருந்த அந்தத் தண்ணீர் தொட்டியின் மீது குழந்தை ஏறியபோது நிலைதடுமாறி உள்ளே விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.