மதுரையில் அதிர்ச்சி.. கடந்த 100 நாட்களில் 194 சிறுமிகளுக்கு பிரசவம்.. தலைசுற்றிப்போன அதிகாரிகள்!

 
குழந்தை

மதுரை மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 194 இள வயது பிரசவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் மதுரை மாநகராட்சியில் மட்டும் 49க்கும் மேற்பட்ட இள  வயதுப் பிறப்புகள் பதிவாகியுள்ளன.

கர்ப்பிணி

ஒருபுறம், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் என்ற பெயரில் உருவாகும் உறவுகள், குழந்தை துஷ்பிரயோகம் எனப் பல வழிகளில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்பிரச்னையில் பெற்றோர்கள், பள்ளிகள், மருத்துவத்துறை, சமூக நலத்துறை என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, 18 வயதுக்குட்பட்ட மைனர் பெண்கள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் உடனடியாக சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என கடந்த 2012ம் ஆண்டு அரசு சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால் இதுவரை எந்தப் பள்ளியும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவில்லை. இதுகுறித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, அரசு சுற்றறிக்கையை உடனடியாக அமல்படுத்தக் கோரி, பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், மாணவர்கள் அதிக நேரம் பள்ளியிலேயே செலவிடுவதால், சமுதாயம் சார்ந்து நல்லது கெட்டது என்ன என்பதைச் சொல்ல, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது கட்டாயம் என்றும் உத்தரவிடப்பட்டது. . ஆனால், இதுவரை மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர் வெரோனிகா ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ​​18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிரசவமாக உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா