மதுரையில் அதிர்ச்சி... கணவன் - மனைவி தற்கொலையால் இரண்டு பெண் குழந்தைகள் பரிதவிப்பு!

 
தம்பதி தற்கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குடும்பத் தகராறு காரணமாகக் கணவனும் மனைவியும் அடுத்தடுத்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி சந்தோஷ் குமார் (36). இவருடைய மனைவி பிரியதர்ஷினி (28). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாதக் கைப்பிள்ளை ஒன்றுமாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

கடந்த சில நாட்களாகக் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடும் மனவருத்தத்தில் இருந்த பிரியதர்ஷினி, தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு மூத்த 7 வயதுச் சிறுமி அலறியடித்துக் கத்தியதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சந்தோஷ் குமார் மனைவியின் உடலைக் கண்டு கதறி அழுதார். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள பழைய வீட்டுக்குச் சென்ற அவர், சிறிது நேரத்தில் வேட்டியால் தூக்கிட்டுத் தானும் உயிரை மாய்த்துக் கொண்டார்.

பள்ளி மானவி தற்கொலை

இச்சம்பவம் குறித்து அறிந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரை இழந்து நின்ற 7 வயது மற்றும் 3 மாதக் கைக்குழந்தைகள் இரண்டும் அநாதையாகப் பரிதவிப்பது அப்பகுதி மக்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.