நெல்லையில் அதிர்ச்சி... நள்ளிரவில் வீடு புகுந்து, பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்!

 
ஆபாச வீடியோ செல்போன்

நெல்லை மாவட்டத்தில் தனியாக வசிக்கும் பெண்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து ஆபாச வீடியோ எடுத்து வந்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த பீர்முகமது (23) என்ற இளைஞர், தனியாக வசிக்கும் பெண்களின் வீடுகளுக்குள் இரவில் புகுந்து ஆபாச வீடியோ எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த போது வீடியோ எடுக்க முயன்றவரைப் பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்துத் தாக்கினர். காயமடைந்த பீர்முகமது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தலைமறைவானார்.

ஆபாச வீடியோ

தப்பிச் சென்ற பீர்முகமதுவை தீவிரமாகத் தேடி வந்த காவல்துறையினர், திருவனந்தபுரத்தில் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.