பெரம்பலூரில் அதிர்ச்சி... 4 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தை!

 
சிறுமி பாலியல் பலாத்காரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தனது 4 வயதுப் பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கொடூர வழக்கில், 43 வயது டிவி மெக்கானிக்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துப் பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயதுடைய டிவி மெக்கானிக் ஒருவர், கடந்த 2022-ஆம் ஆண்டு தனது 4 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சிறுமிக்கு பாலியல் கொடுமை இழைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இவ்வழக்கின் விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சாட்சியங்களையும் மருத்துவ ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கொடூரக் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

தாயாரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி அளித்த ‘பகீர்’ வாக்குமூலம்..!

சொந்த மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.