தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சிறுவன் தப்பியோட்டம்!
சேலத்தில் கோகுல் என்ற மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டபோது காவலர்களின் கண்காணிப்பையும் மீறித் தப்பி ஓடியுள்ளான்.
சேலம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அச்சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் காவல்துறையினர் அழைத்து வந்தபோது, நீதிமன்ற வளாகத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறிச் சிறுவன் தப்பியோடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தப்பியோடிய சிறுவனைப் பிடிக்கக் காவல்துறையினர் உடனடியாகத் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு தேனியில் சிறையில் இருந்து காவலர்களை தாக்கிவிட்டு, 17 கைதிகள் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த அதிர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற இந்தச் சம்பவம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் உள்ள பெரும் குறைபாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
