காலையிலேயே அதிர்ச்சி... அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - 3 குழந்தைகள் பலி; மகாராஷ்டிராவில் பரபரப்பு!

 
வெடி வெடிபொருள் தீ

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சிகிச்சை பெற்று வந்த 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

அமராவதி மருத்துவமனையின் 3-வது தளத்தில் இயங்கி வந்த NICU வார்டில், அதிகாலை சுமார் 3:30 மணியளவில் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீவிரமாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பச்சிளம் குழந்தைகள் புகை மற்றும் தீயில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தன.

தீ விபத்து தீயணைப்பு

மின்சாரக் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வென்டிலேட்டர் (Ventilator) சாதனம் வெடித்துச் சிதறியதால் விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.