காலையிலேயே அதிர்ச்சி... நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்!

 
கார்த்திக் சபேஷ்

தமிழ் திரைப்படத் துறையில் பல படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். இவரது திடீர் மறைவு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு நடிப்பில் வெளியான 'வல்லவன்', விஷால் நடிப்பில் உருவான 'பட்டத்து யானை', 'குளிர் 100 டிகிரி', 'காதல் சொல்ல வந்தேன்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கார்த்திக் சபேஷ் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இவர், குறுகிய காலத்திலேயே தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தனது 37 வது வயதிலேயே அவர் காலமானது சக கலைஞர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கார்த்திக் சபேஷின் மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.