காலையிலேயே அதிர்ச்சி... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!
இன்று அக்டோபர் மாதம் துவங்க்யுள்ள நிலையில், மாதத்தின் தொடக்கத்திலேயே, எண்ணெய் நிறுவனங்கள் வணிக மற்றும் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு கியாஸ் சிலிண்டரின் விலை அக்டோபர் 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் படி, சென்னையில் வணிக சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.10.50 அதிகரித்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இல்லை: மறுபுறம், பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள 14.2 கிலோ எடையுள்ள சாதாரண வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இது கடந்த மாதத்தைப் போலவே தற்போதும் சென்னையில் ரூ.957.50 என்ற விலையிலேயே தொடர்கிறது. சிறிய வகை 5 கிலோ மற்றும் 10 கிலோ சிலிண்டர்களின் விலைகளிலும் பெரிய மாற்றங்கள் இன்றி வழக்கமான நிலையே நீடிக்கிறது.
