அதிகாலையிலேயே அதிர்ச்சி... எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!

 
அதிகாலையிலேயே அதிர்ச்சி... எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!

உத்தர பிரதேச மாநிலத்தில் இந்தூரில் இருந்து ஜபல்பூர் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 

மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் “இந்தூர்-ஜபல்பூர்” எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

அதிகாலையிலேயே அதிர்ச்சி... எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!

ஜபல்பூர் ரயில் நிலையம் அருகே இந்தூர் ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுக் கொண்டிருந்த போது, ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு திடீரென கீழிறங்கின. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினா். எனினும் அந்த வழித்தடத்தில் ரயில்கள் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அதிகாலையிலேயே அதிர்ச்சி... எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!

விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் “இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் (22191) இரண்டு பெட்டிகள் ஜபல்பூர் நிலையத்தின் 6 ஆவது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது.

ரயில் நிலையம் அருகில் என்பதால், ரயில் மெதுவாக வந்ததால் நல்வாய்ப்பாக எந்தவிதமான அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.” என்றனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா