காலையிலேயே அதிர்ச்சி... 14 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

 
காலையிலேயே அதிர்ச்சி... 14 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

இன்று அதிகாலையிலேயே அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 14 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் த்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லோகந்த்வாலா வளாகத்தில் உள்ள 14 மாடிகளைக் குடியிருப்பு கட்டிடத்தில் இன்று காலை 8 மணியளவில் 'லெவல் ஒன்' தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்த தகவலறிந்ததும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு குடியிருப்பு வளாகத்தின் உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

மும்பை தீயணைப்புத் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, லோகண்ட்வாலா வளாகத்தில் 4வது குறுக்கு சாலையில் அமைந்துள்ள ரியா பேலஸ் கட்டிடத்தின் 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 10 வது மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்து கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர், 

காலையிலேயே அதிர்ச்சி... 14 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

காலை 8.55 மணியளவில் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, இந்த தீ விபத்தில் சந்திரபிரகாஷ் சோனி (74), காந்தா சோனி (74) மற்றும் பெலுபேட்டா (42) என உயிரிழந்த 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  தீ விபத்திற்கான காரணங்களை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த மாத தொடக்கத்தில், ஏழு வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மும்பையின் செம்பூரில் உள்ள இரட்டை மாடி கடை மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.