காலையிலேயே அதிர்ச்சி... நாடு முழுவதும் அமலுக்கு வந்தது... அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்வு!

 
அமுல் பால்

பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலுக்கான உள்ளீட்டுச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, நாட்டின் பிரபல பால் வர்த்தக நிறுவனமான 'அமுல்' , தனது பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளது.

அமுல் பால்

பால் கொள்முதல், போக்குவரத்து மற்றும் பதப்படுத்தும் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமுல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமுல் தாஜா 3% கொழுப்புச் சத்து கொண்ட 'அமுல் தாஜா' டோண்ட் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. 6% கொழுப்புச் சத்து கொண்ட 'அமுல் கோல்டு' முழு கொழுப்புப் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது. அமுல் நிறுவனத்தின் இந்த புதிய விலை உயர்வு இன்று நவம்பர் 12ம் தேதி காலை முதல் அமலுக்கு வந்தது. 

அமுல்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு, தினசரி பயன்படுத்தப்படும் பாலின் இந்த திடீர் விலை உயர்வு மேலும் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.