காலையிலேயே அதிர்ச்சி... இன்று முதல் சென்னை விமான நிலையத்தில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் உயர்வு!
Oct 11, 2026, 09:50 IST
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் கட்டணம் இன்று (அக்டோபர் 11) முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒப்பந்த விதிமுறைகளின் அடிப்படையில் இந்த மாதாந்திர கட்டணத் திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கார்கள் கட்டணம்: முதல் 30 நிமிடங்கள் வரை: ரூ.90 (பழைய கட்டணம் ரூ.85). 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை: ரூ.115 (பழைய கட்டணம் ரூ.110). 1 முதல் 2 மணி நேரம் வரை: ரூ.175 (பழைய கட்டணம் ரூ.165). 10 முதல் 24 மணி நேரம் வரை நிறுத்த: ரூ.580
பயணிகள் மற்றும் விமான நிலையத்திற்கு வந்து செல்பவர்களுக்கு வசதியாக, வாகனங்கள் விமான நிலையத்திற்கு வந்து 10 நிமிடங்களுக்குள் வெளியேறினால் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்ற நடைமுறை வழக்கம்போலத் தொடரும்.
