காலையிலேயே அதிர்ச்சி... பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

 
இன்று (டிசம்பர் 08) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!! இன்று (டிசம்பர் 08) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தமிழகத்தில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, எரிபொருள் விலை மாற்றம் அமலுக்கு வந்துள்ளது:

இன்று (நவம்பர் 19) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நேற்று வரை இருந்த விலையிலிருந்து அதிகரித்து, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.87 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.99.66 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் (Crude Oil) விலை மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள லேசான மாற்றங்கள் காரணமாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்

கடந்த சில நாட்களாகப் பெரிய மாற்றமின்றி ஒரே விலையில் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று லேசான உயர்வைச் சந்தித்திருப்பது நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் லாரி, ஆட்டோ உள்ளிட்ட வணிக வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.