காலையிலேயே அதிர்ச்சி... தேனிசைத் தென்றல் தேவா காலமானார்... திரையுலகமே சோகம்!

 
தேவா

தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவா இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார்.தனது 75-வது வயதில் காலமான இசையமைப்பாளரின் மறைவு செய்தி சினிமா உலகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவா (75) உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது திடீர் மறைவுத் செய்தி கோலிவுட் வட்டாரத்தையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தேவா

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் தேவாவிற்கு, இன்று காலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை சுமார் 8.30 மணியளவில் அவர் காலமானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மைலாப்பூரில் பிறந்த தேவா, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான 'மாட்டுக்கார மன்னர்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தனது தனித்துவமான கானா மற்றும் கிராமிய இசையின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.