வேலூரில் அதிர்ச்சி... பெண் ஜிம் உரிமையாளரை பலாத்காரம் செய்த கணவன்.. வீடியோ எடுத்த மனைவி - ​​​​​நகைகள், பணம் பறிப்பு!

 
ஆபாச வீடியோ

வேலூர் மாவட்டத்தில் பெண் ஜிம் உரிமையாளரைத் திட்டமிட்டு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் மற்றும் நகைகளைப் பறித்த தம்பதியை வேலூர் நகரக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எப்சியா - மணிவண்ணன் தம்பதி. இவர்கள் அப்பகுதியில் ஜிம் நடத்தி வரும் பெண் உரிமையாளர் ஒருவருடன் நட்பு ரீதியாகப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், தங்களது வீட்டில் நடைபெறும் பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொள்ளுமாறு அந்தப் பெண்ணை தம்பதியர் முறைப்படி அழைத்துள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்று விழாவிற்குச் சென்ற அந்தப் பெண்ணிற்கு, தம்பதியர் இருவரும் திட்டமிட்டு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.

செல்போன் வீடியோ  இளம்பெண் பாலியல்

குளிர்பானத்தைக் குடித்த பெண் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, கணவன் மணிவண்ணன் அந்தப் பெண்ணைக் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளார். இந்த அத்துமீறலை அவரது மனைவி எப்சியா தனது செல்போனில் முழுமையாக வீடியோ எடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மயக்கம் தெளிந்து எழுந்த போது, தம்பதியர் இருவரும் தாங்கள் எடுத்த வீடியோவைக் காட்டி மிரட்டியுள்ளனர். இந்த வீடியோவை இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து ரூ.4.50 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பல சவரன் தங்க நகைகளைப் பறித்துள்ளனர்.

பணம் மற்றும் நகைகளைப் பறித்த பிறகும், தம்பதியரின் மிரட்டல் நீடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், தைரியமாக வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். குற்றச்சாட்டு நிரூபணமானதை அடுத்து, சத்துவாச்சாரியில் தலைமறைவாக இருந்த எப்சியா மற்றும் மணிவண்ணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் பறிக்கப்பட்ட பொருட்கள் குறித்த விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.