அதிர்ச்சி.. படுகர் இனத்தை அவமதித்ததாக ஜெயம் ரவியின் திரைப்படத்திற்கு எதிர்ப்பு!
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படத்தில் இடம்பெற்ற ’ஹெத்தையம்மா’ பாடலுக்கு படுகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் அங்க பாஸ்கரன்' போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள பிரதர் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் 'ஹெத்தையம்மா' என்ற குத்து பாடலும் இடம்பெற்றுள்ளது. இதற்கு நீலகிரியில் உள்ள படுகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீலகிரியில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமாக ஹெத்தையம்மன் திகழ்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை இந்த அம்மனுக்கு திருவிழா நடத்துவார்கள். இதற்காக 48 நாட்கள் விரதம் இருந்து ஆண்களும் பெண்களும் வெண்ணிற ஆடை அணிந்து தங்கள் குல தெய்வத்தை பாடி துதிப்பார்கள். மக்கள் நலன் காக்கும் ஹெத்தியம்மனை வழிபட்டால் உடல் பலம் பெருகி ஆரோக்கியம் மேம்படும் என்பது படுகர்களின் நம்பிக்கை. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து படுகர்கள் வருகின்றனர்.
அவர்கள் இந்த நிகழ்வை மிகவும் புனிதமாக மதிக்கிறார்கள். இந்நிலையில், 'பிரதர்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலின் முழு வரலாறும் தெரியவில்லை என்றும், தங்கள் குலதெய்வத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் நீலகிரி மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த பாடலில் உள்ள வரிகளை நீக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!