அதிர்ச்சி.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை ஆடையை கழற்ற சொன்ன நீதிபதி!

 
கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து, ஹிண்டன் காவல் நிலையத்தில், மார்ச், 27ல், பெண் புகார் அளித்தார்.அதன்படி, 30ம் தேதி, விசாரணைக்காக, மாஜிஸ்திரேட் (ஆண்) முன், பெண் ஆஜரானார். அப்போது நீதிபதி, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடைகளை கழற்றி காயங்களைக் காட்டும்படி கூறியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், காயங்களைக் காட்ட மறுத்துவிட்டார்.

மேலும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், விசாரணையின் போது பெண்ணிடம் காயத்தைக் காட்டுமாறு கூறியதாகக் கூறப்படும் மாஜிஸ்திரேட் மீது இன்று (ஏப்ரல் 4) எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, “காயங்களைப் பார்க்க உடைகளைக் அகற்ற சொன்னார். இது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. பெண் நீதிபதிகள் இருந்திருந்தால் நான் அப்படி செய்திருப்பேன்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம், திரிபுராவில் உள்ள கமால்பூர் நீதிமன்றத்தில், பெண் ஒருவர் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியின் அறைக்கு சென்று நீதிபதியிடம் தனியாக வாக்குமூலம் அளித்தபோது நீதிபதி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதேபோல் கடந்த ஆண்டு இறுதியில் உத்தரபிரதேசத்தில் உள்ள பண்டா மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “நான் நீதிபதியாக இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவருடன் பணிபுரியும் சக ஊழியர்களாலும் நான் துன்புறுத்தப்பட்டிருக்கிறேன். இதுகுறித்து அலகாபாத் நீதிமன்றத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என்ன நடந்தது என்று யாரும் கேட்கவில்லை.  

நான் குப்பை போல நடத்தப்பட்டேன். என் உயிரை எடுக்க எனக்கு அனுமதி கொடு. என் வாழ்வு முடிந்து போகட்டும்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெண் உடலில் உள்ள காயங்களை காட்டுமாறு ஆண் நீதிபதி கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web