அதிர்ச்சி.. மகளிர் விடுதிக்குள் பெண் வேடமிட்டு நுழைந்த மர்ம நபர் கைது..!!

 
யாதவா கல்லூரி விவகாரம்
மகளிர் கல்லூரி விடுதிக்குள் பெண்  வேடமிட்டு நுழைந்து பெண்களுக்கு தொல்லை கொடுத்த  மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் யாதவா மகளிர் கல்லூரியில் மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கல்லூரியில் கல்லூரி மாணவிகள் தங்குவதற்கான விடுதி செயல்பட்டுவருகிறது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக மாணவிகள் விடுதிக்கு பெண்கள் அணியும் ஆடையை அணிந்தபடி மர்ம நபர்கள் சிலர் நடமாடுவதாகவும், அவர்கள் தனியாக இருக்கும் மாணவிகளுக்கு பல்வேறு தொல்லை தருவதாகவும் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். 

யாதவர் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா

ஆனாலும் கல்லூரி நிர்வாகம் மகளிர் விடுதியில் ஆட்கள் நடமாட்டம் குறித்த மாணவிகளின் புகார் குறித்து கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கல்லூரி விடுதிக்குள் நுழைந்து  மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த   இளைஞர்களை கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டியும்  கல்லூரியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று முன்தினம் மதியம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது மாணவிகள் கல்லூரி நுழைவாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தபோது அங்கிருந்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளை கல்லூரிக்குள் செல்லுமாறு விரட்டினர்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் திருப்பாலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் மதுரை கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்த அழகர்பாண்டி (32) என்பவரை திருப்பாலை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரையிலுள்ள யாதவா மகளிர் கல்லூரி விடுதியில் இளைஞர் நுழைந்து தொல்லை அளித்த விவகாரத்தில் எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி முறையான விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும் என மாணவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

From around the web