அதிர்ச்சி.. ஓடும் ரயிலில் பயங்கர தீ விபத்து.. பயணிகளுக்கு நேர்ந்த சோகம்..!!

 
ஓடும் ரயிலில் தீ விபத்து
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் இருந்து மத்தியப்பிரதேசத்தின் சியோனி நோக்கி பதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் பண்டாய் ரயில்நிலையத்தை ரயில் கடந்தது.

Coaches of the Patalkot Express after a fire broke out, in Agra, on  Wednesday. (PTI) - The Shillong Times

அப்போது எஞ்சியினில் இருந்து 3 மற்றும் 4 ஆகிய இரண்டு பெட்டிகளில் தீப்பற்றியது. இதனால் பயணிகள் அபாய குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பற்றி எறிந்த ரயில் பெட்டிகளில் இருந்து பயணிகள் கீழே குதித்து உயிர் தப்பினர். முன்னெச்சரிக்கையாக ரயிலின் 4 பெட்டிகள் தனியாக பிரிக்கப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை கட்டுப்படுத்தி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 பயணிகள் காயமடைந்தனர்.

Train Accident | Agra train fire: How a gateman detected smoke and averted a  big tragedy - Telegraph India

இவர்கள் ஆக்ராவில் உள்ள எஸ். என். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் மூன்று மற்றும் நான்காவது பெட்டிகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. மேலும் இரண்டு பெட்டிகள் சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web