அதிர்ச்சி... தீவிரமடையும் குரங்கு காய்ச்சல்... மேலும் 2 பேர் பலி... அலறும் கர்நாடகா!

 
குரங்கு வைரஸ்

ஏற்கெனவே குரங்கு காய்ச்சல் காரணமாக 2 பேர் பலியாகி உள்ள நிலையில், 41 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கர்நாடக மக்களை அலற வைத்துள்ளது.  கடந்த புதிது புதிதாக பரவி வரும் வைரஸ் கிருமிகளால், அடுத்த தலைமுறை மக்கள் பயத்தில் உறைந்து தான் போயிருக்கிறார்கள். கொரோனா கால ஊரடங்கு புரட்டி போட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்தே மக்கள் முழுமையாக மீளாத  நிலையில், அடுத்தடுத்து வந்த பெருவெள்ளமும், சுனாமி பூகம்பங்களும் பல நாடுகளை இன்னும் பொருளாதாரத்தில் பின்னுக்கு இழுத்து பிடித்திருக்கின்றன. இந்நிலையில், இந்தியாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில், 12 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், பெரியளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும், இது குறித்த பயத்திலேயே அந்த பகுதி மக்கள் இருக்கின்றனர். 

குரங்கு காய்ச்சலின் முதல் அறிகுறி கடந்த ஜனவரி 16 ம் தேதி பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, குரங்கு காய்ச்சல் பொதுவாக குரங்குகளில் வாழும் உண்ணி கடிப்பதால் பரவுகிறது. இந்த உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. உண்ணி கடித்த கால்நடைகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.

Monkey fever spreads in Karnataka, 21 cases reported-Telangana Today

கர்நாடகாவில் இந்த நோய் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் வீடு வீடாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். வனப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள், நோய் பரவும் அபாயம் உள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து உத்தர கன்னடா மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் நீரஜ் பி கூறும் போது, ​​“குரங்கு காய்ச்சலுக்கு அடுத்த  முதல் ஐந்து நாட்களில் அதிக காய்ச்சல், கடுமையான உடல்வலி, தலைவலி, கண் சிவத்தல், மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றும்” என்றார்.  தொடர்ந்து, "மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 31 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. இதுவரை எந்த ஒரு தீவிரமான பாதிப்பும் ஏற்படவில்லை.

31 cases of monkey fever reported in Uttara Kannada district

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்கள் மருத்துவ அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கிராம சபை மற்றும் கிராம பஞ்சாயத்து அளவில் பல கூட்டங்களை நடத்தி வருகின்றனர். எங்களது அனைத்து தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும் இதுபோன்ற நோயாளிகளை கையாள போதுமான பணியாளர்கள் மற்றும் வசதிகள் உள்ளன," என்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web