அதிர்ச்சி... பெண்ணின் மார்பகத்தில் முருகன் டாட்டூ... சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்!
திண்டுக்கல் மாவட்டத்தில் இம்மாதம் 24 மற்றும் 25ம் தேதி என இரண்டு நாட்களுக்கு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை நடத்தவிருக்கும் இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.இந்நிலையில், இளம்பெண் ஒருவர் தமிழ்க் கடவுள் முருகனின் உருவப்படத்தை தனது மார்பகத்தில், டாட்டூவாக வரைந்திருப்பதைப் போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்து கடவுளின் உருவத்தை எப்படி டாட்டூவாக மார்பகத்தில் வரையலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இன்னொருபுறம் சிலர் இதற்கு மறுமொழியும் கூறி வருகின்றனர். கடவுளால் படைக்கப்பட்ட நமது உடலில், கடவுளின் உருவப்படத்தை வரைவதில் எந்த தவறும் இல்லை என்று கருத்து கூறி வருகின்றனர். ஆண்கள் தங்கள் மார்பில் கடவுளின் உருவப்படத்தை டாட்டூவாக போடும் போது கொந்தளிக்காத சமூகம் பெண்ணாக இதைச் செய்யும் போது மட்டும் கொந்தளிக்கு என்கிற ரீதியிலும் எதிர் கருத்துக்கள் தெறிக்கின்றன.
இதெல்லாமே ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. இவர்களைப் பொறுத்தவரை பெண்ணின் மார்பு என்பது அசிங்கமான, ஆபாசமான பகுதி. அந்த இடத்தில் கடவுளின் படத்தை டாட்டூ வரைந்தால் கடவுள் கோபப்படுவார். அவளுடைய மார்பில் அவள் டாட்டூ வரைந்திருந்தா உங்களுக்கு எல்லாம் என்னய்யா பிரச்சினை என்கிற ரீதியில் பெண்கள் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பக்தியை வெளிப்படுத்த கண்ட இடங்களில் டாட்டூ குத்தி தரம் தாழ்ந்து போகாதீங்க. ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் கடவுளை எங்கே, எப்படி வணங்க வேண்டுமோ அப்படி தான் வணங்க வேண்டும் என்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கேரள சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது சர்ச்சையானது போலவே சமூக வலைத்தளங்களில் தற்போது முருகர் டாட்டூ சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், இது குறித்த மீம்ஸ்களும் இணையத்தல் வைரலாகி வருகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
