அதிர்ச்சி... போதைப் பொருள் சோதனையின் போது தப்பியோடிய அஜித் பட நடிகருக்கு நோட்டீஸ்!

 
ஷைன் டாம் சாக்கோ
கேரளாவில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் திடீரென போலீசார் போதைப் பொருள் சோதனை நடத்திய போது, 3வது மாடியில் இருந்து குதித்து அஜித் பட நடிகர் தப்பியோடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம், கொச்சியில் சொகுசு ஓட்டல் ஒன்றில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது ஒருவர் ஓட்டலின் 3வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்பட்டது. அவர் யார்? என விசாரணை நடத்திய போது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என தெரியவந்தது. இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் உறுதிப்படுத்தினர்.

ஷைன் டாம் சாக்கோ

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி உள்பட பல படங்களில் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளார். இவர் ஏன் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கவும் கொச்சி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில், ஓட்டலில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் விசாரிக்க உள்ளோம். விசாரணையின் ஒரு பகுதியாக ஓட்டல் ஊழியர்களிடமும் வாக்கு மூலங்கள் பெறப்படும் என்றார்.

சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web