தை வெள்ளிக்கிழமையில் அதிர்ச்சி... புதிய உச்சம் தொட்ட தங்கம்... சவரனுக்கு ரூ480 உயர்வு!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025ல் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.  இந்தியாவை பொறுத்தாரை தங்கத்தின் மீதான முதலீடு ஒரு சேமிப்பு என்றே தான் நடுத்தர மக்கள் தங்கத்தை சேர்த்து வருகின்றனர்.  அந்த வகையில் திருமண  நிகழ்வுகள், விஷேச நாட்கள் டிசைன் டிசைனாக தங்க நகைகளை அணிவார்கள்.

தங்கம்

இதனால் தங்கத்தின் விலை கூடினாலும்  நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட சவரன் ரூ15000க்கு தான் விற்பனை செய்யப்பட்டது.  தற்போதைய நிலவரப்படி ரூ59000ஐ  கடந்த தங்கத்தின் விலை அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!


அந்த வகையில் 2025ம் ஆண்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆண்டாக இருந்து வருகிறது.  இதன் படி நேற்று  கிராம் ஒன்றுக்கு ரூ 50  உயர்ந்தது. இன்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி கிராமுக்கு ரூ 7450க்கும்,  சவரனுக்கு ரூ 480  உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ59600 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web