சோகம்... பஸ்ஸில் உட்கார்ந்தபடியே உயிரிழந்த இளைஞர்!

 
கலைமணி

இப்படி எல்லாம் கூட மரணம் சம்பவிக்குமா என்று கதறுகிறார்கள் உறவினர்கள். பேருந்தில் எத்தனைக் கனவுகளுடன் ஏறி இருப்பார்? என்னென்ன நினைச்சானோ? என்று கதறுகிறார்கள். பேருந்து பயணத்தின் போது, அமர்ந்தப்படியே இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பழைய குயிலம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் மகன் கலைமணி (27) இவர் சேலத்தில் கட்டுமான தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.  இரவு சேலத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பேருந்தில் செங்கம் பயணச்சீட்டு வாங்கி கொண்டு இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து வந்த கலைமணி செங்கம் புதிய பேருந்து நிலையம் பேருந்து வந்தடைந்தார்.

பின்னர் செங்கம் பயணிகளை இறங்கும்படி பேருந்து நடத்துனர் கூறிய போது இறங்க வேண்டிய கலைமணி இறங்காமல் அவரது இருக்கையிலே அமர்ந்து உறங்கியபடியே இருந்துள்ளார். கலைமணியை நடத்துனர் தட்டி எழுப்பியும் கலைமணி அசைவற்று உள்ளதை கண்டு  அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் நாடி துடிப்பை சரிபார்த்த போது உயிரிழந்து உள்ளார் என தெரிய வந்தது. இதையடுத்து நடத்துனர் திருவண்ணாமலை செல்லும் பயணிகளை பேருந்து நிலையத்திலேயே இறக்கி விட்டனர்.

உடனடியாக பேருந்தை செங்கம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சம்பவம் குறித்து  புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கலைமணியின் உறவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு கலைமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  பின்னர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா