மைதானத்தில் அதிர்ச்சி.. உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் கால்பந்து விளையாடிய ஆண்கள் அணி!

 
 ஜெர்மன் கால்பந்து அணி

செவ்வாய்கிழமை டியூஸ்பர்க்கில் 300 பேர் கொண்ட கூட்டத்திற்கு முன்பாக  ஜெர்மன் கால்பந்து அணி ஒன்று ஆடையின்றி விளையாடியது. இதன் போது மைதானத்தில் இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். வீரர்கள் காலுறைகள் மற்றும் காலணிகளைத் தவிர வேறு எதுவும் அணியவில்லை. ஆடையின்றியே விளையாடினர்.


இதில் அவர்களின் எண்கள் பின்புறத்தில் அச்சிடப்பட்டிருந்தன. நேஷனல்மன்ஸ்சாஃப்ட் (ஜெர்மன் நிர்வாண மற்றும் தேசிய அணி) என்று அறியப்படுகிறது. அவர்கள் இந்தப் போட்டியில் ஆல்-ஸ்டார்ஸ் என்ற போர்த்துகீசிய வம்சாவளி அணிக்கு எதிராக விளையாடினர், இந்த போட்டி  8-8 என டிராவில் முடிந்தது.

ஆடைகளின்றி விளையாடியது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.. ஒட்டுமொத்த அணியும் ஆடையின்றி விளையாடியது அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web