அதிர்ச்சி.. பாலத்தில் இருந்து கீழே விழுந்த அகதிகள் சென்ற வாகனம்.. 8 பேர் பரிதாப பலி!

 
அல்பேனியா

அல்பேனியா தலைநகர் டிரானாவில் இருந்து தென்கிழக்கே 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஜோசா நதி பாலத்தில் இன்று அதிகாலை  கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து தலைக்குப்புற ஆற்றில் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், காரில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர்.

அப்பகுதி காவல்துறையின் கூற்றுப்படி, இறந்தவர்களில் ஏழு பேர் வெளிநாட்டில் இருந்து புலம்பெயர்ந்தோர் என்றும்   காரை ஓட்டிய ஓட்டுநர் மட்டும் உள்ளூரை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தனர். 8 பேரின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அல்பேனியாவில் இருக்கும் மக்கள் சொந்த நாடுகளில் இருந்து மற்ற நாடுகளில் தஞ்சம் கோரும் ஒரு முக்கிய வழி அல்ல. இருப்பினும், அரபு நாடுகள் அல்லது ஆசியாவைச் சேர்ந்த ஒரு சிறிய குழு அல்பேனியா வழியை கடல் வழியாகவும், மற்ற அண்டை நாடுகளுக்கு தரை வழியாகவும் பயணிக்க பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web