அதிர்ச்சி.. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் பறிமுதல்.. ரயிலில் சிக்கிய கட்டு கட்டாண பணம்!

 
நயினார் நாகேந்திரன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலில் படி தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையிட்டனர். அப்போது எஸ்.7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் கட்டுகட்டாக பெட்டிகளில் மறைத்து பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து மூன்று நபர்களை கைது செய்து போலீசார், தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் சொந்தமான  புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும் இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசார் இடம் தெரிவித்தனர் .

இதனை அடுத்து இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் பணத்தை எடுத்து வந்த சதீஷ் (வயது 33) நவீன் (வயது 31) பெருமாள் (வயது 25) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜன் முன்னிலையில் போலீசார் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்