அதிர்ச்சி.. அக்காவை துரத்தி துரத்தி கொடூரமாக சுத்தியால் அடித்து கொலை.. தம்பி வெறிச்செயல்!

 
நரசம்மா

கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டம், பொம்மரலத்தொட்டியைச் சேர்ந்தவர் நரசம்மா (65). இவரது சகோதரர் சுகுரப்பா. மனநலம் பாதிக்கப்பட்ட சுக்குரப்பாவை அவரது சகோதரி நரசம்மா கவனித்து வந்தார். இதற்காக சுகுரப்பாவை வீட்டில் கை, கால்களை கட்டிய நிலையில் கவனித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை சுகுரப்பா வீட்டில் இருந்த சுத்தியலால் கை, கால்களில் கட்டியிருந்த செயினை உடைத்து சென்றுள்ளார்.

அப்போது இதை தடுக்க முயன்ற மனைவி மற்றும் சகோதரி நரசம்மாவை இரும்பு சுத்தியலால் தாக்கினார். அவரிடமிருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியே ஓடினார் நரசம்மா. ஆனால் சுக்குரப்பா அவரை தெருவில் துரத்திச் சென்று சுத்தியலால் தலையில் அடித்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் நரசம்மா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சைதாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

கொலை

அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட சுக்குரப்பா, தனது சகோதரி நரசம்மாவை சுத்தியலால் அடித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நரசம்மா கொலை செய்யப்பட்ட உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து சுக்குரப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி ஒருவர் நடுரோட்டில் சகோதரனால் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web